(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் காட்டுப்பன்றி இறைச்சசி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடி படையினாரால் கைது செய்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிககப்பட்டுள்ளதாகவும் இவர் எதிர்வரும் 14ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே இந்த சுமார் எட்டு கிலோ 600 கிராம் பன்றி இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
இதே வேளை அண்மைக்காலமாக சுற்றுலா பிரயாணிகள் காட்டு பன்றி இறைச்சியினை விரும்பி உண்பதனால் காட்டுப்பன்றிகளை மிகவும் சூட்சமான முறையில் வேட்டையாடி சுற்றுலாபிராயாணிகள் செல்லும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்துவருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment
Post a Comment