-நடராசா கிருஸ்ணகுமார்
வவுனியா மாவட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பகுதியைச் சேர்ந்த எஸ். மகேந்திரன் வயது 32 என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கொன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த புதன்கிழமை (31) முதல், வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்


Post a Comment
Post a Comment