மண்சரிவு அபாயத்தினால் நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் 7ம் திகதி புதன்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அக் கல்லூரி அதிபர் டி.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 30ம் திகதி கல்லூரியின் மூன்று மாடி கட்டிடப் பகுதியிலுள்ள பாதுகாப்பு மதில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமையால், அதன் கீழ் பகுதியில் இருந்த வகுப்பறைகள் மூன்று சேதமாகியது.
அத்துடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் மேற்பரப்பில் அமைந்துள்ள கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாடசாலையின் பின்புறம் 60 அடி உயரமான பாரிய மண்மேடு காணப்படுவதுடன் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, குறித்த மலை பிரதேசத்திலேயே நாவலபிட்டி நகரிற்கு நீர் வழங்கும் நீர்தாங்கியும் அமைந்துள்ளது அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பாரிய அபாயத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என நாவலபிட்டி பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment