ஆகமங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், வன்முறைகள் அதிகரிப்பு



நாட்டில் ஆகமங்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதனால், தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அச் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இதுபோன்ற இனவாத மற்றும் வர்க்க பேதங்களை தோற்றுவிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபரிடம் கோருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.