(rameez mohamed)
கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாத்தறை
மாவட்டத்திலுள்ள மக்களுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.
அக்குரஸ்ஸை, கொடபிடிய ஜும்மா பள்ளிவாசல், கொடபிடிய விகாரை ஆகியவற்றுக்கு தலா ஒரு
லொறி பொருட்களும், அகுரஸ்ஸ கிராம மக்களுக்கு ஒரு லொறி பொருட்களும் இவ்வாறு
கையளிக்கப்பட்டுள்ளன.
லொறி பொருட்களும், அகுரஸ்ஸ கிராம மக்களுக்கு ஒரு லொறி பொருட்களும் இவ்வாறு
கையளிக்கப்பட்டுள்ளன.
உதவிப்பொருட்கள் கையளிக்கும் இந்நிகழ்வில் ஈரான் இஸ்லாமிய குடியரசு உயர் ஸ்தானிகள்
காரியாலயம் சார்பாக காரியாலயத்தின் உயர் அதிகாரி அலி காஸிமி, சட்டத்தரணி ரமீஸ் பஷீர், ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட முஸ்லிம் ஒருங்கிணைப்பாளர் இம்திஸான் நவாஸ், சாதாத் முஸ்லிம் மஹாவித்தியாலய அதிபர் வஸீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment
Post a Comment