பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2016 /2017 கல்வி ஆண்டின் அடிப்படையில் பல்கலைக்கழக பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவுசெய்யும் கடிதம் அவர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அறியக்கிடைத்துள்ளது.
தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் கடிதம் கிடைக்கப்பெறாமல் இருக்கின்றது. அதனை கருத்திற்கொண்டே அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இந்த கால எல்லையை நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்களை பதிவு செய்வதற்கான இறுதித் திகதியாக, ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment