பொத்துவிலுக்கும் சதொச சேவையாற்றும்



-எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் பிரதேசத்தில், எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு, சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம். அப்துல் மஜீட், தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சதொச விற்பனை நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.