தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
தபால் நிலையங்களை சுற்றுலா ஹோட்டலாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நீக்குமாறு கோரியே, இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இணங்கியுள்ள நிலையில், இந்த போராட்டம் நியாயமற்றது என, தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment