கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவன் சடலமாக



மட்டக்களப்பு கல்லடி பாலத்தில்  தற்கொலை  செய்துகொண்ட  மாணவன், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கணிதப்பிரிவில் கற்றுவந்த அம்பிளாந்துறையைச் சேர்ந்த கருணாகரன் பவனுசன் என்ற குறித்த மாணவன், நேற்று கல்லடி பாலத்திற்கருகில் காணாமல் போயிருந்தார். அவரது பாடசாலை சீரூடை மற்றும் புத்தகப்பை என்பன கல்லடி பாலத்திற்கருகில் காணப்பட்ட நிலையில், குறித்த மாணவன் பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் நடத்தப்பட்டது.


இந்நிலையில், குறித்த மாணவனின் சடலம் கல்லடி பாலத்தின்கீழ் கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.