நாடளாவிய ரீதியில் மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் வகுப்புப் புறக்கணிப்பால், மருத்துவபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வது மற்றும் வைத்தியர்களாக மாணவர்களை வெளியேற்றுவது போன்ற விடயங்கள், 5 வருடங்களுக்குக் காலதாமதமாவதாக, மருத்துவபீட கலாநிதிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்திய கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இந்த வகுப்புப் புறக்கணிப்பு, இந்த வருடத்துக்குள் நிறைவடையாவிட்டால், அதன் தாக்கமானது, 10 வருடங்கள் வரை நீடிக்கும்.
"மருத்துவபீட மாணவர்களுக்கு நடத்தப்படும் பரீட்சைகளின் போது, வரவு 80 சதவீதம் காணப்பட வேண்டும். எனினும், இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால், எந்தவொரு மாணவருக்கும் பரீட்சையில் தோற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, மருத்துவபீட மாணவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்” என்றார்.
"மேலும், இதன்விளைவாக, முந்தைய ஆண்டுகளில் முடிக்கப்படாத பாடத்திட்டங்களை, இந்த ஆண்டுக்கு முன்னதாக நிறைவு செய்து இந்த நெருக்கடியை தீர்க்கவிட்டால், மருத்துவபீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வரும் தினத்தில் இருந்து ஆரம்பத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டிவரும்.
"இந்த நிலைமைகளின் அடிப்படையில், எதிர்வரும் வருடத்தில் வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்தியர்கள் உள்வாங்க முடியாத நிலைமை ஏற்படும்.
"சைட்டம் கல்லூரியை மூடுமாறு கோரி, மருத்துவபீட மாணவர்கள், இவ்வாண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல், இடைக்கிடையே, வகுப்புப் புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
"இந்தக் காரணத்தால், மருத்துவபீடத்துக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் எவரையும், மருத்துவபீடத்துக்கு உள்வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை, பாடசாலைகளில் தரம் 8க்கு மேல் உள்ள கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment