வெட்கம்: முஸ்லிம் சமூகம் அழும்போது சிரிக்கின்றார்கள்



(மௌலவி அர்பான் சாலிஹ் )
”யாரேனும் ஒருவர், உங்களில் நோன்பு துறக்க வசதியற்றோருக்கு, நோன்பு துறக்க உணவளியுங்கள் ”என்பது நாயகம்(ஸல்)அவர்களின் அமுத வாக்கு.இப்போதைய இப்தார்கள் யாருக்காக? ஒரு சாண் வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியாத ஏழைகளுக்காக, அல்லது மக்களின் வரிப்பணத்திலும் கொமிசன்,கொந்தராத்துகளில் வயிறு வளரக்கும் அரசியல்வாதிகளுக்காக என்பதை சிந்தியுங்கள் சகோதரர்களே! 


முஸ்லிம் சமுகத்திற்கெதிராக, சிங்கள இனவாத சக்திதகள் நெருப்பினால் அழிக்கத் தலைப்பட்டுள்ளனர். இது பொருளாதாரத்திற்கு உலை வைத்த நிகழ்வல்ல, மாறாக ஒரு மஹியங்கனையிலும்,மஹரகமயிலும், காலியிலும், ஹற்றனிலும் வாழும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கெதிராக நடை பெறும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு. அதனைப் பார்த்துவிட்டு அழுது கொண்டிருக்கும், முஸ்லிம்களுக்கு, இந்த முஸ்லிம் என்ற பெயர்தாங்கி அரசியல்வாதிகள் சிரித்து மகிழ்வதனை, பாருங்கள்.முஸ்லிம் இப்தார் எற்பாட்டார்களே சற்றேனும், புத்திக்கூர்மையுடன் அல்லாாஹ் றசுல் விரும்பிய வழியில் நடக்கப் பாருங்கள்!

அமைச்சுப் பதவியனைத் துாக்கி எறிவேன் என்று வாய்ப்பேச்சில் ஊதிப் பெருக்கும்,அமைச்சர் றிசாத்,அளுத்கம எரிந்த போது, அக்கரைப்பற்று எரிந்ததா, பள்ளிக்குடியிருப்பு பற்றியதா   அன்று என்று கேள்வி, போதாக்குறைக்கு, கத்தார் பேராசிரியர் தீன் முஹம்மதை அழைத்து, ஆப்கானிஸதானில், புத்தர் சிலையினை முஸ்லிம்களே உடைத்தனர் என்று அவர் சொல்ல அன்று சிரித்து மகிழ்ந்து,     இன்று மாயக்கல்லில் சிலைக்குள் சிக்கித் தவிக்கும் அதாவுல்லாஹ்,உதுமால்லெவ்வை, சாணக்கியமாக அரசுடன் பேசி முஸ்லிம்களுக்கெதிரான சதியினை முறியடிப்போம் எனக்கூறிய  பசீர் சேகுதாவுத் போன்றோர் கலந்திருப்பது அக்கரைப்பற்றில் இப்தார் நிகழ்வில்.