ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் தாமாகவே பதவி விலக வேண்டும்



ஊழல், நிருவாக மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களான பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் ரி.குருகுலராசா ஆகியோர் தாமாகவே முன்வந்து பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இன்றைய விசேட அமர்வில் உரையாற்றியபோதே முதலமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று தன்னிலை விளக்கமளித்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் என கோரியதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.