சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்கள்



இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெ்ஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய டெ்ஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிம்பாப்வே அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட வேளையின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதில் சிம்பாப்வே அணியின் ஏர்வின் 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் ரங்கண ஹேரத்  5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.