அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கணவன் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் முதலாம் பிரிவு முனையக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 40 வயதான பெண்ணே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தில் இன்னொரு பெண்ணின் தலையீடு காரணமாக இன்று காலை 9 மணிக்கு இரு பெண்களுக்குமிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தருணத்தில், உயிரிழந்த பெண்ணின் கணவர் அங்கு தேங்காய் உரிக்கும் கம்பியால் மனைவியின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்தில் மனைவி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கணவனை பொலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான, விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment
Post a Comment