மட்டக்களப்பு, கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் இன்று (24) திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞனொருவன் பலியான சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்த விசேட அதிரடிப்படை வீரரை பொதுமக்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லுமாறு பொதுமக்கள் கூறியதையடுத்து, பொலிஸாருக்கும் பொதுக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment