எம்.எஸ்.எம்.ஹனீபா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, இன்று அதிகாலை குடைசாய்ந்ததில், அதில் பயணித்த சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என, பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, சம்மாந்துறை –மல்வத்தைப் பிரதான வீதியால் பயணித்த இந்த பஸ் குடைசாய்ந்து வயலோரத்தில் விழுந்துள்ளது.
மேற்படி பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்தில்; படுகாயமடைந்தவர்கள் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.


Post a Comment
Post a Comment