இராஜினாமா



முதலீட்டு சபையின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உபுல் ஜயசூரியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்ததாகக் கூறினார்.
தமக்கு இந்த பதவி கிடைப்பதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், தமது சுய விருப்பின் பேரில் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும் உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.