ஊழல், பண முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா-விற்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இவர் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இவர் மீதான வழக்கு விசாரணைகள் பிரேசில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று (12) அறிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Post a Comment
Post a Comment