வௌியுறவு செயலாளர் பதவி



அமெரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் புதிய வௌியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (29) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முன்னாள் வௌியுறவு செயலாளர் எசல வீரக்கோன் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். 

ஒரு வருட காரணமாக புதுடில்லியில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக செயற்பட்டு வரும் எசல வீரக்கோன் தூதுவர் பதவியில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.