கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மகபொல திட்டத்தை உரிய காலத்தில் பெறுவதற்கு ஆவன செய், சி.சி.டி.வி கெமராவை உடன் அகற்று, அநாவசிய வகுப்புத் தடைகளை நிறுத்து, விடுதிப் பிரச்சினைக்கு திர்வைத் தா போன்ற 05 கோரிக்கைகள் அடங்கிய சத்தியாக்கிரக போராட்டம் வியாழக்கிழமையுடன் 37 வது நாளைக் கடந்துள்ளது.
அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் எதுவித நடவடிக்கைளும் மேற்கொள்ளபடாமையையிட்டு வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து மாணவர்களினால் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியினுள் சென்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post a Comment
Post a Comment