ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்புத் தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக, கபே அமைப்பு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சில காரியாலயங்களில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கும், ஏனைய நிறுவனங்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை, குறித்த செயலாளர் காரியாலயம் மேற்கொண்டிருந்தது.
இந்தக் காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 800 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 250 முறைப்பாடுகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 700 முறைப்பாடுகள், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராகவும், 30 முறைப்பாடுகள், நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் தொடர்பிலும், 70 ஏனைய முறைப்பாடுகளும் ஆகும்.
மேலும், இந்தக் காரியாலயத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் இவ்வாறு மூடப்பட்டுள்ளது என, கபே அமைப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment