போதைக்கு எதிர்ப்பு



ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின், பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கங்களின் ஒன்றான, "போதையற்ற இளம் சமூகத்தை உறுவாக்கி, அபிவிருத்திக்கு இட்டுச் செல்லல்" எனும் தொனிப்பொருளில்  திருகோணமலை, கிண்ணியா/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், நேற்று (24)  காலை 8.30 மணிக்கு, போதைப்பொருளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேரணியாகச் சென்றார்கள்.
கிண்ணியா வலய கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாதுள்ளாஹ் , வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜிம்,  வித்தியாலய ஆசிரியர்களும், இப்பேரணியில் கலந்துகொண்டனர்.