(Riswan.C.M)
நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற சம்பவம் ஒன்று பல்லம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (27) இரவு 9.05 பல்லம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, யோதகெலே பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தரக்கம் சண்டையில் முடிவடைந்த நிலையில், கூரிய ஆயுதத்தால் கணவன் குறித்த பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் தன்விலகெலே, யோதகேலே, பல்லம எனும் முகவரியில் வசிக்கும் 46 வயதான, ஹேமலதா என்பவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில், பல்லம பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment