கோப்பாய் பொலிஸார் மீது தாக்குதல்: சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை



யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸார், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையுடன் தொடர்புடையோரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால், யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில், இன்று பகல் 1.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த, பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கை, கால்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குழுவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்