இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைவந்துள்ளது.
ஐந்து வருடங்கள் பணியாற்றிய இவர் மேலதிகமாக ஆறு மாதங்கள் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக இருந்துள்ளார்.
பேராசிரியர் காலோ பொன்சேகா கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியை வகித்து வந்துள்ளார்.
அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படப் போகும் புதிய தலைவர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவருவாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment