ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் கிணறு அமைக்கும் நோக்கில் கற்பாறையை உடைப்பற்காக வெடிகுண்டு வைத்தமையால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் தேசமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மாலை தியாவட்டவான் பகுதியில் தனியார் காணி ஒன்றுக்குள் கிணறு அமைக்கும் நோக்கில் குழி வெட்டிய போது அதனுள் காணப்பட்ட கற்பாறையை உடைப்பற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதனால் அருகில் இருந்த மரியம் கிராமம் தியாவட்டுவான் பகுதிகளுக்கு கற்கள் வந்தமையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பத்து வீடுகளில் ஓடுகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீடுகளில் வெடிப்பும் ஏற்பட்டு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதே வேளை வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனமும் சிறு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், மரியம் கிராம பள்ளிவாயல், வைத்தியசாலை சுவர்களும் வெடித்துள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிலுள்ளவர்கள் சிலர் வீட்டை பூட்டி உறக்கத்தில் இருந்தமையால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தப்பி விட்டதாகவும், கற்பாறைகளை உடைப்பதற்கு வெடிகுண்டு வைக்கவுள்ள விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் தங்களுக்கு அறியத்தரவில்லையென மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்பாதிப்பு காரணமாக கர்பினி தாய் உட்பட இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment