கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானையொன்று கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
கொக்கிலாய் பிரதேசத்திற்கு சொந்தமான கொக்குதுடுவாயில் இருந்து கடற்படை 8ம் மைல்கல் தூரத்தில் அடித்து செல்லப்பட்ட யானையே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேக தாக்குதல் படகினால் இந்த யானை அடித்து செல்லப்படுவது முதலில் கண்காணிக்கப்பட்டுள்ளது.
பின்னர் யானையை காப்பாற்றுவதற்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றுமொரு தாக்குதல் படகு மற்றும் கடற்படை குழுவினர் விரைவாக அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இரண்டு செட்ரிக் கப்பல்களினால் 7 கடற்படை குழுவினர் யானையை காப்பாற்றுவதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.
பின்னர் பாரிய அளவிலான கயிறு பயன்படுத்தி ஆழ்கடலில் சிக்கியிருந்த யானையை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
யானையை புல்மூட்டை, யான்ஓய பிரதேசத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர், அது வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment