தண்ணாமுனையில், சமயசார் பாடசாலைக் கல்வி முறைமை



தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக் கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் என்ற கருப் பொருளினை அடிப்படையாக கொண்ட நிகழ்வு இன்று (17) தன்னாமுனை மியானி மண்டபத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்எம். சுஹைர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது சிறுவர்கள் முதல் பெரியோர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் தொடர்பாக சத்தியப் பிரமானமும் செய்து வைக்கப்பட்டது.