குளிக்கச்சென்ற இருவரும் மாயம்



அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடலில் மூழ்கி சகோதரர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர்.
அக்கரைப்பற்றை சேர்ந்த 21 மற்றும் 19 வயதான இருவரே கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
கடலுக்கு குளிக்க சென்ற மூன்று பேரில் இருவர் நீரில் அள்ளுண்டு போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.