கறுப்பு பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது



ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்​தவொரு பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லாதமையினால் அப்பட்டியலிருந்து நீக்கியதாக, அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், 2003ஆம் ஆண்டு இப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ​ வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.