வாழைச்சேனையில் விசித்திர வாழை



(ஷாணிக்கா)
வாழைச்சேனை பேத்தாழையில் அதிசயிக்க தக்க வகையில் வாழை மரம் ஒன்று வாழைக்குலையினை வாழை மரத்தின் இடைப்பகுதியை துளைத்து வெளித்தள்ளியுள்ளது.
இவ் அதிசய சம்பவம் வாழைச்சேனை பேத்தாழையில் ஒரு வீட்டில் கிணற்றடியில் உள்ள வாழைமரங்களில் ஒரு மரத்திலையே இவ்வாறு நடந்துள்ளது.
குறித்த வாழை மரத்தில் குலை வெளித்தள்ளிய பின்னரும் வழமைபோல் இலைகள் நுனிப்பகுதியால் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையையும் அவதானிக்க முடிகிறது.
இருந்தும் வாழைமரங்களில் இவ்வாறான பல அதிசயிக்க தக்க சம்பவங்கள் இடம் பெறுவது வழமையாகிலும் குறித்த வீட்டின் உரிமையாளர்களும் உறவினர்களும் அதிசயிக்கின்றனர்.
20170725_133808_resized_120170725_140712_resized20170725_133842_resized