புதிய இராணுவ தளபதியாக, பாதுகாப்புப் படைகளின் பிரதானி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளலான முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜனாதிபதியின் புதிய செயலாளராக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (04) முற்பகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டன. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


Post a Comment
Post a Comment