டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால்



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்யூஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் அணிகளின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் மேலும் கூறியுள்ளார்.