மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஹட்டன் – கொட்டகலைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதை அடுத்து குறித்த மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சேதமடைந்த தண்டவாளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து 110 ஆவது மைல் கல்லுக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை ரயில் ஒன்று தடம்புரண்டது.
இதன்போது காயமடைந்த மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த அனர்த்தத்தை அடுத்து தண்டவாளத்திற்கான புனரமைப்புப் பணிகளுக்கு கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று சென்றுள்ளது.
இதேவேளை, இந்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment