(க.கிஷாந்தன்)
பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 30.07.2017 அன்று “தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்” அட்டனில் இடம்பெற்றது.
அட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர்.ஜெயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
மேற்படி தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஓகஸ்ட் மாதம் முதலாந் திகதி முதல் 7 ஆந் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாகவே அட்டனில் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் இடம்பெற்றது.
அட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் 30.07.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு முன்னதாக அட்டன் மணிக்கூண்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான பாதை வழியாக “தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்” எனும் தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபவனி ஒன்றும் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு மற்றும் சுகாதாரத் துறையோடு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள், தாய்மார்கள், பல்வேறு கழகங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment