IDH சந்தியில் கார் மீது துப்பாக்கிச் சூடு



கொத்தட்டுவ, ஐ.டீ.எச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரால் சொகுசு கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தால் காரின் முன் பக்கத்தில் மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், சுமார் 100 மீட்டர் அளவு தூரத்தில் இருந்த வீடொன்றிற்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.