சிம்பாப்வே வீரர் #Ryan Burl ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குப் பாராட்டு




 Thank you very much to the doctors and staff at Hambantota hospital for helping me recover! A terribly frightening experience 🙏🏽
சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
சிம்பாப்வே அணி வீரர் Ryan Burl உணவு விஷமாகியதால் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது தனக்கு சிசிக்கை அளித்த வைத்தியர்கள் தொடர்பில் Ryan Burl பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தான் சுகயீனமடைந்த நேரத்தில் வைத்தியர்கள் சிறப்பாக கவனித்து விரைவான சிகிச்சை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக Ryan Burl தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
என்னை விரைவாக குணப்படுத்திய அம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் நன்றி. மிகப்பெரிய அனுபவம் ஒன்று கிடைத்தது என அவர் பதிவிட்டிருந்தார்.