திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை திறந்து பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வளாகத்தில் நடைபெற்றது.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ப.மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசால் காசிம். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினரான கே.கோடீஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், த.கலையரசன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் ஏ.எல்.அலாவுதீன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment