சைட்டமுக்கு எதிரான போராட்டத்தின் போது சுகாதார அமைச்சிற்குள் பலாத்காரமாக நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 03 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 02 இலட்சம் ரூபாவான சரீரப் பிணையிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக உத்தரவிட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
எவ்வாறாயினும் இந்த வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளான அனைத்து பல்கலைக்கழக பௌத்த துறவிகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தொடர்பில் கோரப்பட்ட பிணை மனுவை வரும் 08ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

Post a Comment
Post a Comment