இந்தியாவின் 71 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.
செங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சி முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய இந்தியாவின் இலட்சியங்கள் தொடர்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.
மனிதம் மற்றும் கருணை கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதே புதிய இந்தியாவின் இலட்சியம் என தெரிவித்துள்ளார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானிய குடியாட்சியிடம் இருந்து இறையாண்மையும் பொறுப்புகளும் இந்திய மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நமது முன்னோர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கண்ட கனவை நனவாக்கும் உச்ச நிலை இதுவென குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை இந்த நிலைக்கு உயர்த்தக் காரணமாக இருந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு நாம் பெரிதும் கடன் பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார்.
தமது இன்னுயிரை இந்த போராட்டத்தில் தியாகம் செய்த அவர்களை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு மீதான நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் அறிவியல் மீதான நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றில் அரசும், குடிமக்களும் இணைந்து பங்களிப்பதே புதிய இந்தியா கொள்கையின் அடிப்படை அம்சம் எனவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment