எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை களனிவெளி புகையிரத மார்க்கத்தில் புகையிரத பஸ் சேவையை தவிர மற்றையய அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத பாதையின் அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்காகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் புகையிரத போக்குவரத்து நிறுத்தப்படுவதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக மஹரகமை மற்றும் கொஸ்கம பகுதிகளுக்கிடையில் நடைமுறையிலிருக்கும் ரயில் பஸ் சேவை இயங்கும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை 14ம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போன்று புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment