(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுபோக நெல் அறுவடை அமோகமாக நடைபெற்றுவருகின்றது .
கடும் வரட்சிக்கு மத்தியிலும் குளத்து நீரை நம்பி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை நல்ல விளைவை தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏக்கரொன்றிலிருந்தோ 30 முதல் 35 நெல் மூடைகள் அறுவடை பெறப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நெல் அறுவடை செய்யும் அறுவை இயந்திரம் மூலம் பரவலாக அறுவடை இடம்பெறுகிறது ஏக்கரொன்றுக்கு அறுவடைக்கூலியாக 6000 ரூபா இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்ள செலவாவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
அறுவடை தொழிலாளர் மூலம் அறுவடை செய்ய ஏக்கரொன்றுக்கு 10.000 ரூபா செலவாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.அனேகமாக இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்வதையே காண முடிகிறது.
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் இப்பிரதேசங்க ளில் வந்து குவிந்திருக்கின்றன இதனால் அறுவடைத்தொழிலாளர்கள் எதுவித தொழில்களும் இன்றி பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தனியார் வியாபாரிகளை அறுவடை இடம்பெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்கிறார்கள் 1 மூடை நெல் 2700 ரூபா முதல் 2800 ரூபா விலைகளில் தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்


Post a Comment
Post a Comment