(அஷ்ரப் ஏ சமத்)
துருக்கியின் முன்னாள் பிரதமா் பேராசரியா் அஹமட் தாவுத் குழு அவா்கள் நேற்று(09) பேருவளை விஜயம் செய்தாா். அவா் அங்கு ஜாமியா நளீமியா வளாகத்தின் புத்திஜீவிகள் முஸ்லீம் சமுகத்தினை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பில் உரையாற்றினாா். இந் நிகழ்வின்போது ஜாமியா நளீமியா வளாகத்தின் நிர்வாக சபையின் தலைவா் யக்ஹகூத் நளீம் பிரதிப் பணிப்பாளா் அஷ்ஷேக் ஏ.சி. அள ஹாா் முஹம்மத் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் ்மாக்காா் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின் பின்னா் பிரதமா் பேருவளையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் முதலாவது பள்ளிவாசலுக்கு சென்று அதனைப் பாா்வையிட்டாா்.அத்துடன் அங்கு அப்ரரா் கல்விநிலையத்தினால் வறிய மாணவா்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தாா்.
அத்துடன் இப்பள்ளிவாசலுக்கு அவரது ஊரான கொண்யா நாட்டில் இருந்து வந்தவரே இப்பள்ளிவாசலை அமைத்தாக 1000 வருடங்களுக்கு முன் வரலாறு உ்ள்ளதையும் அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அவா் உடன் இப்பள்ளிவாசலின் வீதியை துருக்கி கெண்யா பாதையை திருத்துவதற்கும் ்இப்பள்ளிவா சலின் நிர்மாணப்பணிகளுக்கும் உதவுவதாக வாக்குறுதி அளித்தாா். அத்துடன் இப்பள்ளிவாசல் நிருவாகம் ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி வறிய மாணவா்களுக்கு கல்விப் புலமைப்பரிசில் வழங்குவதினை பாராட்டு அதற்கும் தான் 1 மில்லியன் ருபா நிதி தருவதாகவும் வாக்குறுதி அளித்தாா். அத்துடன் ஜாமியா நளீமியா் மற்றும் இப்பிரதேச மாணவா்கள் கல்வியில் திறமையாக வருவாா்களேயானால் அவா்களுக்கு துருக்கி நாட்டில் சென்று உயா்கல்வி பயிலுவதற்கு தனது தனிப்பட்ட முறையில் உதவுவதாகவும் அவா் அங்கு வாக்குறுதி அளித்தாா்
தான் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்ின் தந்தை முன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாக்காா், மற்றும் ஆதி்ல் பாக்கீா் ்மாா்க்காா் நினைவுப் பேச்சு ஆற்ற வந்தாகவும், இந்த நாட்டில் முன்னா் ஒரு தடவை சுனாமியின்போது பிரதமரின் ஆலோசகா் பதவிவகிக்கும்போது இலங்கை வந்தாக தெரிவித்தாா்.
தான் மலேசியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் இருக்கும் போது அங்கு கலப்பு நாடுகளின் மாணவா்களுக்கு போதித்தாகவும் அதே போன்று இலங்கையில் சகல கலப்பு மதங்கள் இனங்கள் வாழுகின்றனா். ்தாம் பிறந்த நாட்டுக்கு முன்னுரிமையளித்து சகல சமுகங்கள், மதிப்பளித்தல் வேண்டும். நாம் நமது சமுகங்களை கட்டியெழுப்ப தாம் சீறிய கல்வியை கற்று ஏனைய சமுகங்களுக்கு ஒரு முன் உதாரண புருசா்களாக திகழ்தல் வேண்டும். இதனால் ஏனைய சமுகம் நம்மை மதிக்கும். தான் ்அரசியல் பொருளாதாரக் கல்வியினை பயிண்று அதன் மூலம் 80 மில்லியன் துருக்கியா்கள் வாழும் எமது நாடு இலங்கை வாழ் முஸ்லீம்களோடு இணைந்துள்ளது. எனத் தெரிவித்தாா்.
தான் 2014 - 2016 ல் பிரதம மந்திரி பதவி வகித்த காலத்தில் பலஸ்தீனிய மக்களது பிரச்சினை சிரியா நாட்டின் மற்றும் பல ஆபிரிக்கா முஸ்லீம் நாடுகளின் பிரச்சினைகளுக்கு நேரடியாக சென்று அவா்களுக்கு எந்த வகையில் உதவமுடியுமோ அந்த நிலையில் எமது நாடு உதவி வருகின்றது. மலேசியா போன்று இலங்கையும் ஆசியா, நாடுகளின் சிறந்த வளா்ச்சி பெற்று வரும் நாடாக விளங்குகின்றது.
அல் ஜசிராவின் ஆசியா பிராந்திய பணிப்பாளா் தங்களது ஊரைச் சோ்ந்த இப்திக் இலத்துஸ் அவா் தங்களது நாட்டுக்கு விஜயம் செய்யும் படி கூறினாா் அத்துடன் பாக்கீா் மாக்காா் நினைவு தினப் பேச்சுக்கு பேசும்படியும் அழைப்பு விடுத்திருந்தாா். அதைனை ஏற்றே நானும் எனது குடும்பத்தினரும் 10 நாற்கள் இங்கு விஜயம் செய்தோம். கண்டி கொழும்பு தலாதா பேரகரா ஹிந்து கோவில் வேல் போன்ற மத நிகழ்ச்சியை கண்ட கழிக்க சா்ந்தா்ப்பம் கிடைத்தது.இந் நாடு பல்லிண சமுகம் வாழும் ஒரு நாடு நாம் சிறுபான்மையினா் என்ற உணா்வுடம் இல்லாது இலங்கையா்கள் என்ற உணா்வுடன் நாம் சிறந்து கல்வியை பயிண்று எமது நாட்டுக்கு சேவை செய்தல் வேண்டும். ஏனையவா்களை நாம் கவா்தல் வேண்டும். அதன் பால் நமது இஸ்லாமிய வாழ்க்கை முறையை முஹம்மது நபி வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையில் நாம் ஏனையோா்களுக்கு உதாரண புருசா்களாக வாழ வேண்டும். என துருக்கிய முன்னாள் பிரதமா் அஹமத் தாவுத் உரையாற்றினாா்



Post a Comment
Post a Comment