ரவி ராஜினாமா



வௌிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இன்று பகல் சபையில் விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைும் கட்சியின் தலைமைத்துவத்தையும் கட்சி ஆதரவாளர்களையும் பாதுகாத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ள நல்லாட்சியை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினராக தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க, அமைச்சருக்கான முன்வரிசை ஆசனத்தை விட்டு பின்வரிசைக்கு சென்று அமர்ந்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என ரவி கருணாநாயக்க சபையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகார மோகம் உடையவர்களின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இடமளிக்கப்போதில்லை என குறிப்பிட்டுள்ள ரவி கருணாநாயக்க, தனக்குரிய இடத்தை காலமும், வரலாறும் தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயக அரசியல் கலாசாரமே முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தாம் சாட்சியமளிப்பதற்கு முக்கிய காரணம் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தன் மீதான அடிப்படையற்ற குற்ச்சாட்டுக்களால் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள போதிலும், எந்த சந்தர்ப்பத்திலும் தாம் அவர்களை நேசிப்பதாகவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.