குடும்பப் பெண்ணின் சடலம்




-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லுச்சேனையில் வசிக்கும் விஸ்ணுகாந்தன் இராசமலர் (வயது 37) என்பவரே, இவ்வாறு நேற்று (04) மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.