நிதியமைச்சின் கீழ் லொத்தர் சபைகள்



வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குள் கீழ் இயங்கிவந்த, தேசிய லொத்தர் சபையும் அபிவிருத்தி லொத்தர் சபையும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சுக்குக் கீழ் இயங்கும் என, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன், நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள  வர்த்தமானி அறிவித்தல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.