இலங்கையை, சொந்த மண்ணில் வீழ்த்தியது, இந்தியா



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
இலங்கை அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்சாலும் 171 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றுள்ளது. 

இதன்படி இந்திய அணி தொடரை 3 க்கு 0 என்ற வகையில் கைப்பற்றியுள்ளது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றது. 

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. 

எனினும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாக தொடரடியாக இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.