விளக்க மறியல்



மருத்துவ மாணவர் பீட சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் தனது சட்டத்தரணியுடன் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ரயன் ஜயலத்தை கைது செய்யுமாறு மாளிகாகந்த மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி சுகாதார அமைச்சின் வளாகத்தினுள் அத்துமீறி பிரவேசித்து, சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.