இதய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டுக்கான விலை குறைப்பு, நேற்று (04) இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய அமுலுக்கு வந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கம்பஹா வித்யாரவீந்திர கலாசாலையின் 3 மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. இதன்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்த கருத்துத் தெரிவிக்கையில்,
“இதற்கமைய, இதயச சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உலோக ஸ்டென்ட்டின் விலை, 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
“மேலும், மருந்துகளுடன் வெளியிடப்படும் ஸ்டென்ட்டின் விலை, 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment