இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கியின் முன்னாள் பிரதமர், பேராசிரியர் அஹமட் டவுலொக்லு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வலுப்பெற்றுள்ளதாக துருக்கியின் முன்னாள் பிரதமர், பேராசிரியர் அஹமட் டவுலொக்லு இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இலங்கை எடுத்துக்காட்டான தேசமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment